வணக்கம் நண்பர்களே!
திருஷ்டி பற்றிய முந்தைய பதிவினை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்து
வரவும்.
மாணவன்: குருவே! திருஷ்டி பற்றி பல விசயங்களை கூறிய தாங்களே அதனை
நீக்கும் வழிகளையும் கூறுங்களேன்.
குரு: குழந்தாய் அவசியம் கூறுகிறேன் கேள்.
இல்லத்தில் ஏற்படுகின்ற திருஷ்டிகளை நீக்குவதற்கு மிக எளிமையான வகையில் "பஞ்ச
திரவிய திருஷ்டி பரிகார முறை" அகஸ்தியரால் அளிக்கப் பட்டுள்ளது.
வியாபாரத்தில் பிறருடைய கண்படுதல், இல்லத்தில் குழந்தைகள்
நோய்வாய்படுதல், படிப்பில் மந்தமாக இருத்தல், புது நகைகளை, ஆடைகளை அணியாதவாறு பல
தொந்தரவுகள் ஏற்படுதல் போன்றவற்றிர்க்கு திருஷ்டி பரிகாரமாக இம்முறை அமைகிறது.
மேலும் பொதுவாக அனைத்து விதமான திருஷ்டிகளைக் களைவதற்கும் இம்முறையை கடைபிடிப்பது
நலம்.
மாணவன்: குருவே! இந்த பரிகாரத்திற்கு ஏதேனும் பெயர் உண்டோ?
குரு: உண்டு. இதன் பெயர் பஞ்ச திரவிய திருஷ்டி பரிகாரம் என்பதாகும்.
இதனை பசுஞ்சானத்தில் மட்டும் செய்த ஒரு விரட்டியை எடுத்து அதில்
கற்பூரமோ தேங்காய் நாரோ, குச்சிகளையோ, அடுப்புக்கரியையோ, வைத்து அக்கினியை எழுப்ப
வேண்டும். மண்ணெண்ணெய் கொண்டு ஒரு போதும் நெருப்பை பற்ற வைக்க கூடாது. இதனால்
சாபங்களே ஏற்படும்.
காய்ந்த சிவப்பு நிற மிளகாய், உப்பு, மிளகு, வீதியில் நம் கால் பட்ட
மண்ணில் சிறிது, வீட்டில் பெருக்கிய குப்பையில் உள்ள மண் ஆகிய ஐந்தையும் வலது
உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, கணவன் மனைவி, பிள்ளைகளை அமர வைத்து வயதில் மூத்தவர்
(பெரியோர்) வலது கையினால், வலது பக்கம் மூன்று முறையும், இடது பக்கம் மூன்று
முறையும் சுற்ற வேண்டும்.
பிறகு கையில் உள்ள 5 திரவியங்களையும் நெருப்பு எழுப்பப் பட்டுள்ள பசு
விரட்டியின் மேல் போட்டுவிட வேண்டும். இப்போது படபடவென வெடிக்கும் சப்தம்
கேட்கும். இதுவே "திருஷ்டி வெடிப்பு சுழல்" ஆகும். பிறகு அந்த விரட்டியை
முச்சந்தியிலோ, நாற்சந்தியிலோ போட்டுவிட வேண்டும்.
இந்த பஞ்ச திரவிய திருஷ்டி பரிகார முறையில் பல ஆன்மீக ரகசியங்கள்
பொதிந்துள்ளன. மிளகாயில் உள்ள காரம் அக்னியில் சேரும்போது
தீவினைகளைப் பொசுக்கும் சக்தி அதற்கு ஏற்படுகின்றது. மிளகிற்குத் தீவினைகளை
தன்னுள் கிரகித்து உரிஞ்சும் தன்மை உண்டு.
பொதுவாக நம்முடைய வாழ்க்கை வசதிகளை குறித்தும், முன்னேற்றங்களைப் பற்றியும்
பொறாமை கொள்வோர், குரோதம், பகைமை போன்ற உணர்சிகளை உடையோர் நம் இல்லத்திற்கு வந்து
சேர்ந்தவுடன் ஊதுபத்தி அல்லது சாம்பிராணி தூபத்தை ஏற்றி, அவர்கள் விட்டுச் செல்கிற
எதிர்வினை சக்திகளையும், தீவினை படிமங்களையும் உடனடியாக அகற்றிட வேண்டும்.
இது கருதியே இல்லத்தில் பெருக்கிய மண்ணின் ஒரு பகுதியும் வீதி மண்ணும்
அக்னியில் சேர்க்கப்படுகின்றன.
மாணவன்: திருஷ்டி பற்றி அனைவரும் நலம் பெற உரைத்தீர்கள். நன்றி
குருதேவா!
நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117

No comments:
Post a Comment