Saturday, April 15, 2017

திருஷ்டியால் வரும் தோஷங்கள் - பாகம் 1


வணக்கம் நண்பர்களே!

மாணவன்: குருவே வணக்கம். இன்று திருஷ்டி என்பது உண்மையா, அது எப்படியெல்லாம் உண்டாகின்றது என்பதனை தெரியப் படுத்துங்கள்.

குரு: அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அருமையான விஷயம். திருஷ்டி என்பது கீழ்க்கண்ட முறைகளில் ஏற்படுகின்றது.

1. திருஷ்டி என்பது ஒருவருடைய வசதிகள், சொத்து, திறமை, இன்பம் குறித்து, மற்றவர்கள் பேராசைக் கண்களுடன் காணுதல்.

2.  தனக்கு நிறைவேறாத ஆசைகள் பிறர்க்கு நின்று பொறாமையுறுதல்.

3.  தனக்கு எவ்வித தகுதியுமில்லாது, பிறர் அனுபவிப்பதைக் கண்டு மனதில் புழுங்குதல்.

4. நல்ல எண்ணங்களே ஏற்படாது எப்பொழுதும் பிறரை வசைபாடுதல், பிறர் மீது எப்பொழுதும் சினத்தோடும், கெடுதல் விளைவிக்கும் எண்ணங்களோடும் இருத்தல்.

இவ்வாராக திருஷ்டியிலும் பலவகைகள் உண்டு.

மாணவன்: இவ்வாறான எண்ணங்கள் ஒருவரை என்ன செய்யும் குருவே!

குரு: திருஷ்டி என்பது உண்மையே. அவை ஆரோக்கியத்தை கெடுக்கும். வியாபார முன்னேற்றத்தைத் தடுக்கும்.

மாணவன்: அப்படி என்றால் ஒவ்வொரு எண்ணத்திற்கும் சக்திகள் உண்டோ?

குரு: சரியாக சொன்னாய். ஒவ்வொரு எண்ணத்திற்கும் சக்தி உண்டு. நல்லதோ, தீயதோ, சமநிலையுடையதோ, உபயோகமற்றதோ எத்தகைய எண்ணத்திற்கும் விதவிதமான சக்திகளுண்டு. நம்முடைய பெரும்பாலான புண்ணிய சக்திகள் கழிவது நம் எண்ணங்களினால்தான்.

மாணவன்: இத்தகைய எண்ணங்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி குருவே?

குரு: எத்தகைய எண்ணமும் இல்லாது வள்ளலார் சுட்டிக் காட்டிய "சும்மா இருப்பதே சுகம்" என்று இருக்க முடியமா? மனிதன் மனதினை சத்விஷயங்களில் செலுத்தினாலே போதும். அவன் மாகான் கூறிய "சும்மா இரு" நிலையை அடைந்ததற்கு ஈடாகிவிடும்.

மாணவன்: இத்தகைய துன்பங்கள் தரும் திருஷ்டியால் விளையும் தீய சக்திகள் எங்கு தங்குகின்றது தேவோ?

குரு: கண் திருஷ்டியால் ஏற்படும் தீய சக்திகள் நம் இல்லத்தில் சுவர் கதவு போன்ற திடப் பொருட்கள், இல்லத்தில் உள்ள வாயு மண்டலம், பழைய பொருட்கள் போன்றவற்றில் எளிதில் படிகின்றன.    

மாணவன்: குருவே! திருஷ்டி பற்றி பல விசயங்களை கூறிய தாங்களே அதனை நீக்கும் வழிகளையும் கூறுங்களேன்.

தொடரும் ........

நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117

No comments:

Post a Comment