Thursday, April 20, 2017

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 1



வணக்கம் நண்பர்களே! 

சூரியன் + செவ்வாய்  இணைவு

சூரியன் மற்றும் செவ்வாய் இரண்டு கிரகங்களின் பொதுவான தன்மை சூடு. இரண்டு வெப்ப கிரகங்கள் இணைவு பெற்ற ஜாதக ஜாதகியரின் உடல் எப்பொழுதும் சூடாகவே இருக்கும். 

அதிகப்படியான சூடானது குழந்தை பிறப்பதில் பிரச்சினையை ஏற்படுத்தும். தாம்பத்ய வாழ்விலும் பிரச்சினை உண்டு. சண்டை போடும் குணம் அதிகமாக இருக்கும். மனைவி அல்லது கணவருடன் இவரால் அன்பாக நடந்து கொள்ளவே முடியாது. 

இவரின் கோபத்தால் தான் பார்க்கும் தொழிலை விடக் கூடியவர். தீடீர் என்று வேலை இல்லாத சூழல் ஏற்படும். வருமானம் பாதிக்கும். அதனால் மனைவி இவரை விட்டு பிரியும் நிலை உண்டாகும். இரத்தம் மற்றும் தண்டுவடம், கால்சிய குறைவு தொடர்பான நோய்களும் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. 

ஜோதிடம் ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் 

நன்றி நண்பர்களே! 

அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ் 
99946 90117

No comments:

Post a Comment