Friday, November 17, 2017
Friday, May 12, 2017
சனி செவ்வாய் இணைவு
வணக்கம் நண்பர்களே!
ஒருவருடைய ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் இணைந்து இருந்தாலோ, சனி
இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய் 2,5,7,9 இடங்களில்
இருந்தாலோ ஜாதகர் தொழில் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திப்பார். இவருக்கு
இயந்திரங்கள் தொடர்புடைய தொழில்,ஆயுதம், சீருடை அணியும் தொழில்,
மருத்துவம்,கட்டிடம் சார்ந்த தொழில் அமைய வாய்ப்புக்கள் உண்டு.
இவருடைய தொழில் மூலம் அதிக டென்சன், அதிக கடன், அதிக பிடிவாதம்
போன்றவற்றை பெறுவார்.
மேலும் இவருக்கு செவ்வாய் வக்கிரமாக இருந்தால் தொழிலில் மிக கடுமையான
நெருக்கடிகளை சந்திப்பார். குருவின் தொடர்பு இருந்தால் பிரச்சினைகள் கண்டிப்பாக
குறையும்.
நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
Tuesday, May 2, 2017
செவ்வாய் ராகு இணைவு
வணக்கம் நண்பர்களே!
ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்து இருந்தால்
முரட்டுத் தனமான பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார். குற்றங்கள் புரியும் மனநிலை
கொண்டவர்.
விளையாட்டு பிரியர்களாக இருப்பார்கள். வாஸ்து குறைய கொண்ட வீட்டில்
வசிப்பார்கள். பற்கள் சம்மந்தமான பிரச்சினைகள் உண்டு.
நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117
Thursday, April 20, 2017
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 2
வணக்கம் நண்பர்களே!
சூரியன் + குரு இணைவு
இந்த இணைவு இருந்தால் ஜாதகர் கௌரவமான பெரிய குடும்பத்தில் பிறந்து இருப்பார்.
பூர்வீக சொத்து இவர்களுக்கு கிடைக்காது.
திருமணதிற்கு பிறகு மனைவியை சேர்ந்தவர்களையும் சேர்த்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவருக்கு வரும்.
இந்த இணைவுடன் ராகுவோ, கேதுவோ தொடர்பு கொண்டால் பிதுர் தோஷமாக அமையும். இதனால் கால தாமதமாக திருமணம் நடைபெறும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 1
சூரியன் + செவ்வாய் இணைவு
சூரியன் மற்றும் செவ்வாய் இரண்டு கிரகங்களின் பொதுவான தன்மை சூடு. இரண்டு வெப்ப கிரகங்கள் இணைவு பெற்ற ஜாதக ஜாதகியரின் உடல் எப்பொழுதும் சூடாகவே இருக்கும்.
அதிகப்படியான சூடானது குழந்தை பிறப்பதில் பிரச்சினையை ஏற்படுத்தும். தாம்பத்ய வாழ்விலும் பிரச்சினை உண்டு. சண்டை போடும் குணம் அதிகமாக இருக்கும். மனைவி அல்லது கணவருடன் இவரால் அன்பாக நடந்து கொள்ளவே முடியாது.
இவரின் கோபத்தால் தான் பார்க்கும் தொழிலை விடக் கூடியவர். தீடீர் என்று வேலை இல்லாத சூழல் ஏற்படும். வருமானம் பாதிக்கும். அதனால் மனைவி இவரை விட்டு பிரியும் நிலை உண்டாகும். இரத்தம் மற்றும் தண்டுவடம், கால்சிய குறைவு தொடர்பான நோய்களும் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஜோதிடம் ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117
திருஷ்டியால் வரும் தோஷங்கள் - பாகம் 2
வணக்கம் நண்பர்களே!
திருஷ்டி பற்றிய முந்தைய பதிவினை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்து
வரவும்.
மாணவன்: குருவே! திருஷ்டி பற்றி பல விசயங்களை கூறிய தாங்களே அதனை
நீக்கும் வழிகளையும் கூறுங்களேன்.
குரு: குழந்தாய் அவசியம் கூறுகிறேன் கேள்.
இல்லத்தில் ஏற்படுகின்ற திருஷ்டிகளை நீக்குவதற்கு மிக எளிமையான வகையில் "பஞ்ச
திரவிய திருஷ்டி பரிகார முறை" அகஸ்தியரால் அளிக்கப் பட்டுள்ளது.
வியாபாரத்தில் பிறருடைய கண்படுதல், இல்லத்தில் குழந்தைகள்
நோய்வாய்படுதல், படிப்பில் மந்தமாக இருத்தல், புது நகைகளை, ஆடைகளை அணியாதவாறு பல
தொந்தரவுகள் ஏற்படுதல் போன்றவற்றிர்க்கு திருஷ்டி பரிகாரமாக இம்முறை அமைகிறது.
மேலும் பொதுவாக அனைத்து விதமான திருஷ்டிகளைக் களைவதற்கும் இம்முறையை கடைபிடிப்பது
நலம்.
மாணவன்: குருவே! இந்த பரிகாரத்திற்கு ஏதேனும் பெயர் உண்டோ?
குரு: உண்டு. இதன் பெயர் பஞ்ச திரவிய திருஷ்டி பரிகாரம் என்பதாகும்.
இதனை பசுஞ்சானத்தில் மட்டும் செய்த ஒரு விரட்டியை எடுத்து அதில்
கற்பூரமோ தேங்காய் நாரோ, குச்சிகளையோ, அடுப்புக்கரியையோ, வைத்து அக்கினியை எழுப்ப
வேண்டும். மண்ணெண்ணெய் கொண்டு ஒரு போதும் நெருப்பை பற்ற வைக்க கூடாது. இதனால்
சாபங்களே ஏற்படும்.
காய்ந்த சிவப்பு நிற மிளகாய், உப்பு, மிளகு, வீதியில் நம் கால் பட்ட
மண்ணில் சிறிது, வீட்டில் பெருக்கிய குப்பையில் உள்ள மண் ஆகிய ஐந்தையும் வலது
உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, கணவன் மனைவி, பிள்ளைகளை அமர வைத்து வயதில் மூத்தவர்
(பெரியோர்) வலது கையினால், வலது பக்கம் மூன்று முறையும், இடது பக்கம் மூன்று
முறையும் சுற்ற வேண்டும்.
பிறகு கையில் உள்ள 5 திரவியங்களையும் நெருப்பு எழுப்பப் பட்டுள்ள பசு
விரட்டியின் மேல் போட்டுவிட வேண்டும். இப்போது படபடவென வெடிக்கும் சப்தம்
கேட்கும். இதுவே "திருஷ்டி வெடிப்பு சுழல்" ஆகும். பிறகு அந்த விரட்டியை
முச்சந்தியிலோ, நாற்சந்தியிலோ போட்டுவிட வேண்டும்.
இந்த பஞ்ச திரவிய திருஷ்டி பரிகார முறையில் பல ஆன்மீக ரகசியங்கள்
பொதிந்துள்ளன. மிளகாயில் உள்ள காரம் அக்னியில் சேரும்போது
தீவினைகளைப் பொசுக்கும் சக்தி அதற்கு ஏற்படுகின்றது. மிளகிற்குத் தீவினைகளை
தன்னுள் கிரகித்து உரிஞ்சும் தன்மை உண்டு.
பொதுவாக நம்முடைய வாழ்க்கை வசதிகளை குறித்தும், முன்னேற்றங்களைப் பற்றியும்
பொறாமை கொள்வோர், குரோதம், பகைமை போன்ற உணர்சிகளை உடையோர் நம் இல்லத்திற்கு வந்து
சேர்ந்தவுடன் ஊதுபத்தி அல்லது சாம்பிராணி தூபத்தை ஏற்றி, அவர்கள் விட்டுச் செல்கிற
எதிர்வினை சக்திகளையும், தீவினை படிமங்களையும் உடனடியாக அகற்றிட வேண்டும்.
இது கருதியே இல்லத்தில் பெருக்கிய மண்ணின் ஒரு பகுதியும் வீதி மண்ணும்
அக்னியில் சேர்க்கப்படுகின்றன.
மாணவன்: திருஷ்டி பற்றி அனைவரும் நலம் பெற உரைத்தீர்கள். நன்றி
குருதேவா!
நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117 Saturday, April 15, 2017
திருஷ்டியால் வரும் தோஷங்கள் - பாகம் 1
வணக்கம் நண்பர்களே!
மாணவன்: குருவே வணக்கம். இன்று திருஷ்டி என்பது உண்மையா, அது
எப்படியெல்லாம் உண்டாகின்றது என்பதனை தெரியப் படுத்துங்கள்.
குரு: அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அருமையான விஷயம். திருஷ்டி
என்பது கீழ்க்கண்ட முறைகளில் ஏற்படுகின்றது.
1. திருஷ்டி என்பது ஒருவருடைய வசதிகள், சொத்து, திறமை, இன்பம்
குறித்து, மற்றவர்கள் பேராசைக் கண்களுடன் காணுதல்.
2. தனக்கு நிறைவேறாத ஆசைகள்
பிறர்க்கு நின்று பொறாமையுறுதல்.
3. தனக்கு எவ்வித
தகுதியுமில்லாது, பிறர் அனுபவிப்பதைக் கண்டு மனதில் புழுங்குதல்.
4. நல்ல எண்ணங்களே ஏற்படாது எப்பொழுதும் பிறரை வசைபாடுதல், பிறர் மீது
எப்பொழுதும் சினத்தோடும், கெடுதல் விளைவிக்கும் எண்ணங்களோடும் இருத்தல்.
இவ்வாராக திருஷ்டியிலும் பலவகைகள் உண்டு.
மாணவன்: இவ்வாறான எண்ணங்கள் ஒருவரை என்ன செய்யும் குருவே!
குரு: திருஷ்டி என்பது உண்மையே. அவை ஆரோக்கியத்தை கெடுக்கும். வியாபார
முன்னேற்றத்தைத் தடுக்கும்.
மாணவன்: அப்படி என்றால் ஒவ்வொரு எண்ணத்திற்கும் சக்திகள் உண்டோ?
குரு: சரியாக சொன்னாய். ஒவ்வொரு எண்ணத்திற்கும் சக்தி உண்டு. நல்லதோ,
தீயதோ, சமநிலையுடையதோ, உபயோகமற்றதோ எத்தகைய எண்ணத்திற்கும் விதவிதமான
சக்திகளுண்டு. நம்முடைய பெரும்பாலான புண்ணிய சக்திகள் கழிவது நம்
எண்ணங்களினால்தான்.
மாணவன்: இத்தகைய எண்ணங்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி குருவே?
குரு: எத்தகைய எண்ணமும் இல்லாது வள்ளலார் சுட்டிக் காட்டிய
"சும்மா இருப்பதே சுகம்" என்று இருக்க முடியமா? மனிதன் மனதினை
சத்விஷயங்களில் செலுத்தினாலே போதும். அவன் மாகான் கூறிய "சும்மா இரு"
நிலையை அடைந்ததற்கு ஈடாகிவிடும்.
மாணவன்: இத்தகைய துன்பங்கள் தரும் திருஷ்டியால் விளையும் தீய சக்திகள்
எங்கு தங்குகின்றது தேவோ?
குரு: கண் திருஷ்டியால் ஏற்படும் தீய சக்திகள் நம் இல்லத்தில் சுவர்
கதவு போன்ற திடப் பொருட்கள், இல்லத்தில் உள்ள வாயு மண்டலம், பழைய பொருட்கள்
போன்றவற்றில் எளிதில் படிகின்றன.
மாணவன்: குருவே! திருஷ்டி பற்றி பல விசயங்களை கூறிய தாங்களே அதனை
நீக்கும் வழிகளையும் கூறுங்களேன்.
தொடரும் ........
நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117
Subscribe to:
Comments (Atom)





